செய்திகள்

மட்டக்களப்பில் சிங்கத்தின் தலைமையில் குதிக்கிறது கூட்டமைப்பு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியில் தீர்மானம் எடுக்கவல்ல முக்கிய தலைவர் ஒருவர், தமிழ் பக்கத்திடம் இந்த தகவலை உறுதி செய்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வேட்பாளர் தெரிவில் பெரும் இழுபறி நீடித்த நிலையில், அனைத்து பிரச்சனைகளிற்குமான தீர்வாக- சர்வரோக நிவாரணியாக- துரைராசசிங்கத்தை களமிறக்க தீர்மானித்ததாக அந்த பிரமுகர் தெரிவித்தார்.

கல்குடா தொகுதியில் தனது சகோதரன் தங்கவேல் என்பவரை களமிறக்க துரைராசசிங்கம் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார். இதனால் கட்சிக்குள் பலத்த விமர்சனங்கள் எழுந்தது.

இதன்பின்னர், கட்சியின் இளைஞரணி தலைவர் சேயோனை களமிறக்க வேண்டுமென மாவட்டத்தில் பலரும் வற்புறுத்தினர். எனினும், துரைராசசிங்கம் அதற்கு இடமளிக்கவில்லை.

இந்தநிலையில் இன்று துரைராசசிங்கம் களமிறங்குவதென முடியாவது. அவரே மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

Related Posts