செய்திகள்

வாழைச்சேனையில் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பிரதான வீதியோரம் இன்று (21) சனிக்கிழமை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல் நிலையில் உள்ளபோது ஒருவர் மயங்கி வீதியில் கிடப்பதைக் கண்ட சிலர் பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் அங்கு கிடந்தவரை சடலமாக மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய காசிம் பாவா அசனார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts