செய்திகள் புலனாய்வுச் செய்திகள் முக்கிய செய்திகள்

களுவாஞ்சிகுடியில் பாரிய நிவாரணம் மோசடி ! அனைத்தையும் அவிழ்ப்போம்!!

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கிராமசேவக பிரிவுகள் அனைத்திற்கும் தற்கால கொரொனா வைரஸ் நோய் பரவாமல் பாதுகாப்பை முன்னிட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இலங்கை அரசு நிவாரணப்பொதிகள் அளித்துள்ளது. இப் பொதிகள் முதியோர், விசேட தேவையுடையோர் மற்றும் சமூத்தி பெறும் குடும்பத்தினர் எனும் வகையில் மக்களுக்கு கொடுக்கப்படுகின்றது.
இதை சில கிராமசேவை பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர்கள் சுயநலம் காரணமாகவும் மனிதாபிமானம் அற்ற முறையிலும் நிவாரணப் பொருட்களை பதுக்கி வருகின்றனர்.

இவர்களது தரவுகள் பெயர்கள் கிராமசேவை பிரிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளோம். மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காவிடில் ஊடகத்தின் ஊடாக பெயர் பட்டியல் வெளியிடப்படும் .

நன்றி

Related Posts