செய்திகள்

வாசம் உதவும் கரங்கள் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு வாசம் உதவும் கரங்கள் அமைப்பினால் இன்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறங்கியாமடு கிராமத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழம் 150 குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பான விழ்ப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் மக்களிடையே வினியோகிக்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தின் சமூக அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இவ் உதவி வழங்கப்பட்டதாக வாசம் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் வே. புpரபாகரன் தெரிவித்தார்.குறித்த கிராமத்தில் வாழும் மக்கள் கடற் தொழிலை பெரிதும் நம்பி வாழும் ஏழை மக்களாகும்.

நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோணா வைரசின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

நாளாந்த கூலித் தொழில் புரியும் பலர் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்க்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.இதன் போது கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு,மற்றும் உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு கொரோனா வைரஸ நோய்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது ; தொடர்பாக மக்களுக்கு உரையாற்றினார்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் பணியில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Posts