செய்திகள்

டெலிகொம் உட்தகவல் தொழில்நுட்ப அமைப்பு மீது சைபர் தாக்குதல்!

ஸ்ரீலங்கா டெலிகொம் உட்தகவல் தொழில்நுட்ப அமைப்பு மீது சைபர் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்காரணமாக உட்தகவல் அமைப்பின் ஒரு பகுதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்.எல்.டி அதன் விழிப்புடன் கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை செயற்பட்டமையால், சில சேவையகங்களை நிறுத்துவதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது இந்த சேவையகங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவற்றை சீரமைக்கும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சைபர் தாக்குதல் முயற்சிக்காரணமாக தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சேவைகளிலும் பாதிப்பு ஏற்படவில்லை என்று ஸ்ரீலங்கா டெலிகொம் அறிவித்துள்ளது.

இதேவேளை இவ்வாறான சைபர் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடிந்தவரை செயல்படுத்துமாறு ஸ்ரீலங்கா டெலிகொம் தனது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Posts