செய்திகள்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் கோத்தா விடுக்கும் வேண்டுக்கோள்!!

இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீண்டகாலமாக அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை முதன் முறையாக தளர்த்தப்பட்டுள்ளது.

“ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை இல்லாதொழிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு நான் உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.” என்றார்.

Related Posts