செய்திகள்

கொரோனா பரவினாலும் திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும்!

மீண்டும் ஒருமுறை கொரோனா தொற்று இலங்கையில் பரவினாலும் நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து தேர்தல்கள் ஆணையாளர் சமன்சிறி ரட்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

மீண்டும் கொரோனா பவரல் ஏற்பட்டாலும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு பதிலாக தொகுதிவாரியாக வாக்கெடுப்பை முன்கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நிலைமைக்கு ஏற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்படாத இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும.

இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

ஏற்கனவே பொதுத்தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட கொரோனாவினால் ஜூன்20க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் ஆகஸ்ட் 5ஐ தேர்தல் தினமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த முறை தேர்தலின்போது 12ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 16.2 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

Related Posts