செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோக சேவை மீள ஆரம்பம்!

தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவயைில் இன்று முதல் நாளாந்தம்,மட்டுப்படுத்தப்பட்ட வகையில் குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த செயற்பாட்டுக்கு இணங்க, பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளதுடன் காலியில் அமைந்துள்ள தென் மாகாண அலுவலகத்தில் நாளாந்தம் 50 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பவர்கள், கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை ,பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் 10 அலுவலக நாட்களுக்குள் வருகை தர உகந்த நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி இலக்கமொன்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த தினத்தில், தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts