செய்திகள்

கருணாவிடம் உடனடியாக விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவு

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உடடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரினால் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் “தான் கொரோனா வைரஸை விடவும் கொடியவன் எனவும், ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாகவும்” குறிப்பிட்டார்.

அவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்து தொடர்பில் அரசியல் மட்டத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சை நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் கருணாவின் கருத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related Posts