சிறப்புக் கட்டுரை முக்கிய செய்திகள்

முரண்பாடுகளைக் கூர்மையாக்கிய இரு மரணங்கள்!

தயாளன்

கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது! (11)

புளொட் – ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு இடையிலானமுரண்பாடுகளைப் பாதிக்கப்பட்ட தரப்புக்களின்வேண்டுகோளுக்கிணங்க புலிகள் சமரசமாகத் தீர்த்துவைத்தனர்.புளொட்டினால் கைதான ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரை விடுவித்தனர். பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் வினரால்கைதான புளொட் உறுப்பினர்களையும் விடுவித்தனர். புளொட்டிடம் அகப்பட்ட ஈ.பி.ஆர்.எல். எவ் உறுப்பினரைப்புளொட் தோழிகள் மீசையை இழுத்துச் சித்திரவதைசெய்ததால் ஆத்திரப்பட்டே இவர்களைக் கைதுசெய்திருந்தனர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினர். மகிழூரில் நடந்தஇந்தச் சமரச முயற்சியின் ஆரம்பத்தில் இரு பகுதியினரும்ஆத்திர நிலையில் இருந்தனர். ஆனாலும் ஒருவரை ஒருவர்தோழர் என்றே கூறிக்கொண்டே கடுமையானவார்த்தைகளைப் பயன்படுத்தினர்.மாறி மாறி இருபகுதியினரிடமும் பேசிக்கொண்டிருந்த பசீர் ஒரு கட்டத்தில்தானும் தோழர் என்று சொல்லிக்கொண்டிருப்பதைஉணர்ந்தார். உடனே சுதாகரித்துக் கொண்டார். இப்படியேகதைத்துப் பழகினால் தமது சகாக்கள் மத்தியிலும் இதேவார்த்தையையே பயன்படுத்த வேண்டுமே – தன்னைநக்கலாகப் பார்ப்பார்களே என்ற எண்ணத்தில் நிதானித்துக்கொண்டார.

தோழர் என்ற சொல்லைக் கொச்சைப்படுத்திய ஈழஇயக்கங்கள்!

‘புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கத்தவர்கள்மூச்சுக்கு முந்நூறு தடவை `தோழர்` எனச் சொல்வர். அப்படிஅழைப்பது செயற்கையாக இருப்பது போல் தோன்றியதுபுலிகளுக்கு. “யாழ்ப்பாணத்தில் உங்களது தோழர்கள்தூஷணத்தால் பேசுகிறார்களே?“ என மட்டக்களப்பிலுள்ளபுலிகளிடம் கேட்பதுண்டு. தாங்கள் நட்பு விடயத்தில்இன்னமும் பக்குவப் படவில்லையோ எனப் புலிகள்சிந்தித்ததுண்டு.ஒரு நாள் மாலை கிரான்குளத்தில் ஒருசந்திப்புக்காகப் போயிருந்தனர் இரு புலிகள். அவ்வேளைபிரதான வீதியால் எதிரெதிரே வந்த அதிரடிப்படையினரின்வாகனங்கள் திடீரென நின்றன. தங்களுக்குள் உரையாடவேசடுதியாக அதில் பயணித்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். ஆனால் ஏதோ வொரு முற்றுகை நடக்கப்போகிறதுஎனக்கருதிய புலிகள் இருவரும் ஆற்றங்கரையை நோக்கிவிரைந்தனர். ஆற்றில் தொழில் செய்பவர்கள் தோணியைக்கரையில் விட்டு சவளைக் (துடுப்பு ) கொண்டு போய்விடுவார்கள். இவர்கள் இருவரும் அந்தத் தோணிகளில்ஒன்றையும், ஊன்றிப் பயணிப்பதற்காக நீண்ட தடியையும்எடுத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கினர். சில நிமிடத்தில்தமக்குப் பின்னால் இன்னொரு தோணியும் ஆற்றுக்குள்பயணிப்பதைக் கண்டனர். அவர்களும் இவர்களைப் போலவேசவள் இல்லாமல் வந்தனர். அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர். பண்டரியா வெளியை நோக்கிப் பயணிப்பதேஇருதரப்பினரினதும் நோக்கம்.ஆற்றின் மறுகரையைஅடைந்ததும் தோழர் தோழர் என்று உரையாடிக்கொண்டேவந்தனர் ஈ.பி.ஆர்.எல்எவ்வினர். அவ்வேளை வழமையாகப்போகும் பாதையை விடுத்து இன்னொரு வழியைக்காட்டி”இது கிட்டப் பாதை“ என்றார் அவர்களில் ஒருவர். முன்னேசென்ற ஒரு தோழர் அவ்வழியாக நாலைந்து அடி வைத்ததும்திடீரென ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டார்.உடனே டேய்…..” என்று தூஷணத்தால் புது வழியைத் காண்பித்தவரைக்கடிந்து கொண்டார் அந்தத் தோழர்.

அப்போதுதான் புலிகளுக்கு ஒரு உண்மை புரிந்தது – இவர்கள் தோழர் என்ற சொல்லை உதட்டளவிலேயேஉச்சரிக்கின்றனர். உள்ளத்திலிருந்து அல்ல. உள்ளத்தில்அது ஆழமாகப் பதிந்திருந்தால் பள்ளத்தில் விழுந்ததுமே `தோழர்` என்றல்லவா அலறியிருக்க வேண்டும்?

பிடல்கஸ்ரோ,சேகுவரா,லெனின் முதலான மகத்தானமனிதர்களின் வாயிலிருந்து இந்தச் சொல்உச்சரிக்கப்பட்டபோது அதற்கு ஒரு கௌரவமான அந்தஸ்துஇருந்தது.அந்தச் சொல்லின் ஆன்மாவையே கொன்றுவிட்டன ஈழப் போராட்டத்தில் இறங்கிய சில இயக்கங்கள்.

சொற்களின் அர்த்தங்கள் காலத்துக்குக் காலம்மாற்றமடைவதுண்டு “நாற்றம்” சொல்லுக்கு நறுமணம் என்றுஅர்த்தம். நாறும் பூ நாதர் என்றும் ஒரு கோவிலிலுள்ள சிவன்அழைக்கப்படுகின்றார். காலப்போக்கில் நாற்றம் என்பதற்குதுர்மணம் என்று பொருள் கொள்ளும் நிலை உருவானது. அது போலவே தோழர் என்ற சொல்லையே எதிர்காலஅகராதியில் அருவருப்பாகவோ சந்தேகமாகவோ பார்க்கும்நிலையை இவர்கள் உருவாக்கி விட்டனர்.

***

பத்மநாபாவை நேரில் எச்சரித்த பிரபாகரன் !

அடுத்த முரண்பாடு வவுனியாவில் இடம்பெற்றது. அங்குள்ளஒரு அரிசி ஆலைக்கு நிதி சேகரிப்புக்காக சென்றனர்ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர். ஆலை சொந்தக்காரர்கள்புலிகளின் ஆதரவாளர்கள். எனவே நாங்கள் புலிகளுக்குமட்டுமே நிதி வழங்குவோம் எனக் கூறினர்.இதனால்வார்த்தைகள் தடித்து முரண்பாடு ஏற்பட்டது. திரும்பிச்சென்றவர்கள் துப்பாக்கி எடுத்துக்கொண்டு வந்துஉயிர்ப்பலியெடுத்தனர். இச் சம்பவம் தொடர்பாக சென்னைஅடையாறிலிருந்த புலிகளின் தலைமைப் பணிமனையில்ஒரு சந்திப்பு நடைபெற்றது. மகிழடித்தீவுச் சம்பவத்தையும்அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டுமெனப் பிரபாகரன்நினைத்தார். அப்போது தமிழகத்துக்குச் சென்றிருந்தபசீரையும் அழைத்துக்கொண்டு சென்றார். ஈழ மக்கள்புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், அதன் செயலாளர் நாயகமும், புரட்சிகரஇராணுவக் கமிஷன் தலைவரும் எனக் குறிப்பிடப்படும்தோழர். பத்மநாபாவும் இன்னொருவரும் இச் சந்திப்பில்கலந்து கொண்டனர்.

“தும்பு பறந்த பேச்சு” என்று சொல்வார்களே அது தான்நடந்தது. பேச்சு வார்த்தை என அதைச் சொல்ல முடியாது. “ஓம் தம்பி ஓம் தம்பி” என்பதைத் தவிர வேறு எதையும்பத்மநாபாவின் வாய் உச்சரிக்க வில்லை. குறிப்பிட்ட நாள்அவகாசம் கொடுத்தார் பிரபாகரன். அதற்குள் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இல்லையேல் நாங்கள் நடவடிக்கைஎடுப்போம் என ஆணித் தரமாகக் கூறினார். மகிழடித்தீவுச்சம்பவம் புலிகள் மீது பழி சுமத்தும் திட்டமிடட நடவடிக்கைஎனவும் இது தொடர்பாக பஷிரிடம் மேலதிக விபரங்களைக்பெற்றுக் கொள்ளுமாறும் கூறிவிட்டுப் புறப்பட்டார். தமதுதவறினை ஒப்புக்கொண்டு குறிப்பிட்ட வவுனியாச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உறுப்பினரை தமதுஇயக்கத்திலிருந்து விலத்துவதாக பகிரங்கமாக ஊடகங்கள்மூலம் தெரிவிப்பார்கள் என்றே அவர் எதிர் பார்த்தார். ஆனால் அச் சம்பவத்தை நியாயப் படுத்தவும் வகையிலேயேஅறிக்கை வந்தது.

புலிகளைப் பொறுத்தவரை ஒருவரை இயக்கத்திலிருந்துவிலத்துவதே அதி உயர் தண்டனையாகக் கருதப்பட்டது . பாலியல் குற்றம் மற்றும் நிதி மோசடி, துரோகம்போன்றவற்றுக்கே மரண தண்டனை. காலப் போக்கில்துரோகத்துக்கு மட்டுமே கடடாயம் மரண தண்டனை. குற்றத்தைப் பொறுத்து ஏனைய வற்றில் நெகிழ்ச்சிப் போக்குஇருந்தது. ஆனாலும் அது பாரதூரமானதாக இருந்தால்மரண தண்டனைதான்.

ஒருவர் தானாக இயக்கத்திலிருந்து விலகுவது என்பது வேறு. அது சம்பந்தப்பட்ட போராளி எடுக்கும் முடிவு.

அதற்கு போராட்டத்தின் மீதான சலிப்பு, பொறுப்பாளர்மீதான அதிருப்தி, குடும்ப நிலைமை போன்ற பல்வேறுகாரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒருவன் இப்பிறவியில்போராட்டத்தில் பங்குபற்றத் தகுதியற்றவன் – அநீதிக்குஎதிராகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாமல்அடங்கியிருக்க வேண்டியவன் என்று உணர்த்துவது மிகவும்கூடுதலான தண்டனை. அவன் போராடும் தகுதி படைத்தஏனையோர் முன்னிலையில் அற்பப் புழுவாகப்கருதப்படுவான். இந்த விடயத்தில் தண்டனை வழங்கவேண்டியது ஈ.பி.ஆர்.எல்.எவ். அதை வழங்கும் முடிவைஎடுக்க ஈ.பி.ஆர்.எல்.எவ் தயாராக இருக்கவில்லை. தனதுஎச்சரிக்கையையும் பொருட்படுத்த வில்லை. எனவே அடுத்துமேற்கொள்ள வேண்டியது என்ன என்பதை வன்னியிலிருந்தபோராளிகளுக்கு அறிவித்தார் பிரபாகரன். விளைவு இதில்சம்பந்தப்பட்ட ரீகன் என்பவரின் ஆயுள் முடிந்தது. அவரதுசட்டைப்பையில் இருந்த ரூபாய் நோட் டையும் ஒரு ரவைதுளைத்ததுச் சென்றது.அதனை நினைவுச் சின்னமாகஎடுத்துக் கொண்டார் டக்ளஸ் தேவானந்தா. திலீபனுடனானசந்திப்புக்களின் போது இதனை அவர் குறிப்பிடுவதுண்டு.

***

கோட்டைப் பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்பு!

ஐந்தாவது முரண்பாடு யாழ் கோட்டைக்கு வெளியேயானகாவலரண் பகுதியில் நடைபெற்றது. இரவு நேரம் காவலில்இருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தப் பதுங்கிப்பதுங்கிச் சென்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர் புலிகளின்பக்கமாக வந்து விட்டனர். படையினரின் சீருடையைஒத்ததாக அவர்களின் உடையும் காணப்பட்டது. இதனால்காவலரணில் இருந்த புலிகள் உறுப்பினர் ஒருவர் இவர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார். இதில் அமீன் என்றஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் உயிரிழந்தார். ஒரு களத்தில்கட்டளையிடும் தரப்பு ஒன்றாகவே இருக்க வேண்டும், அல்லது தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்துஅடுத்த தரப்பினருக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால் எவ்வாறான நிலைமைஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஏனெனில் களநிலைமை அவ்வாறு இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் மீதுதுப்பாக்கி பிரயோகம் மேற் கொண்டவர் பின்னாளில் இதேகாவலரணில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இதிலிருந்தே சூழ்நிலையின் விபரீதத்தைப் புரியலாம்.

தலை குனிந்தபடி துண்டுப் பிரசுரம் வாங்கிய இயக்கங்கள் !

அமீனின் உயிரிழப்பைத் தொடர்ந்து டக்ளஸ் தலைமைதாங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் மக்கள் விடுதலைப் படைதட்டா தெருச் சந்தியில் புலிகளின் முகாமுக்குக் காவலாகநின்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. 21.02.1986 அன்று நடைபெற்ற இச் சம்பவத்தில் சுரேன் ( திருச்சிற்றம்பலம் சுரேந்திரன் – அம்பாள் வீதிநாயன்மார்கட்டு – யாழ்ப்பாணம்) என்ற புலி உறுப்பினர்உயிரிழந்தார். அடுத்த நாள் தட்டாதெருச் சந்தி வழியாகசுரேனின் சடலத்தைத் தாங்கிய வாகன அணி புறப்பட்டது. அதே சமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ் வினரின் வாகன அணியும்மானிப்பாய் வீதியிலிருந்து தட்டாதெருச் சந்திக்கு வந்தது. அதில் அமீனின் சடலம் இருந்திருக்க வேண்டும் போலஇருக்கிறது. இரு வாகன அணிகளும் ஒன்றையொன்றுவிலத்திச் சென்றன. அச்சமயம் அப்பகுதி மக்கள் ” போராளிகளே உங்களுக்குள் முரண்படாதீர்கள். அது எமக்குவேதனையளிக்கிறது” என்ற கருத்துப்பட உள்ளவாசகங்களைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்களை இருபகுதியினருக்கும் வழங்கினர். இரு பகுதியினரும் தலையைக்குனிந்தபடி அதனை வாங்கினர்.

டெலோவுடனான மோதலின் பின் புலிகள் கிராமம்கிராமமாகக் கருத்தரங்குகளை நடத்தி வந்தனர். அச்சமயம்மலரவன் தலைமையில் உரும்பிராய் வைரவர் கோவிலடியில்நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அமீனின் மீதானதுப்பாக்கிப் பிரயோகம் குறித்து ஒருவர் வினாவெழுப்பினார். ” வவுனியாவில் நீங்கள் சுட்ட ரீகனும் பலஸ்தீனப் பயிற்சிபெற்றவர். கோட்டையில் உயிரிழந்த அமீனும்அவ்வாறானவரே. அத்தனை பேர் வந்துகொண்டிருந்த போதுஅமீனுக்கு மட்டும் அது எப்படி சூடுபட்டது? ”

இக் கேள்விக்கு புலிகள் உறுப்பினர் ஒருவர். “அமீனைச்சுட்டதே பிழையெனக் கருதுகிறோம் நாங்கள். உங்களதுகவலை ஏனையவர்களுக்கும் ஏன் சூடுபடவில்லை என்பது” எனப் பதிலளித்தார். வாயடைத்து நின்றார்வினாவெழுப்பியவர்.

***

ஈ.பி.ஆர்.எல்.எவ் வைத் தடைசெய்தது. ஏன் என்பது பற்றிகிட்டு கூறிய விளக்கம் அடுத்து ஒளிபரப்பாகிறது .

வடக்கில் பெருமளவு இரத்தம் சிந்தப்படவில்லை. கிழக்கின்நிலை மாறுபட்டிருந்தது.

இந்திய இராணுவத்தின் வருகையைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர் களமிறக்கப்பட்டனர். மண்டூர்போன்ற இடங்களில் இந்திய இராணுவத்தினர் இருக்கும்தைரியத்தில் புலிகளின் பணிமனைகளைத் தேடி வந்துமுரண் பட்டுக்கொண்டனர். இதனால் பதிலடி கொடுக்கநிர்பந்திக்கப்பட்டனர் புலிகள்.

சண்டை தொடங்கி இந்தியப் படையினரின்கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் தினமும் கொலைக்களம்தான். இந்தியப் படையினரால் கைதாகி தடுப்பில் இருந்தஇருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதுகடத்திச் செல்லப்பட்டு (இரு வெவ்வேறு சம்பவங்களில்) படுகொலை செய்யப்பட்டனர். கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த குலசேகரம் நாகேந்திரன் (கண்ணன்) , யாழ்ஸ்ராலின்வீதியைச் சேர்ந்த ராசா (பாலசுப்பிரமணியம்இரத்தினேஸ்வரன்) ஆகியோரே இவர்களாவார். பிரபலபொருளியல் ஆசிரியர் கிருஷ்ணானந்தன் ( யாழ். கச்சேரியடி) இடைக்கால நிர்வாகசபைக்குப் புலிகளால்பெயரிடப்பட்ட சிவானந்தசுந்தரம் (வல்வெட்டித்துறை), அரசு புலிகள் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தவரானதனபாலசிங்கம், ( காங்கேசன் துறை) ” தம்பி கொழும்பில ” புகழ் நாடக இயக்குனரும் நடிகருமான குமார் தனபால்(அரியாலை) போன்றோர் ஈ.பி.ஆர்.எல்.எவ் வினரால்கொல்லப்பட்டனர்.

பாஷையூரைச் சேர்ந்த லோங்கன் முதலானோர் இந்தப்படுகொலைகளை நிகழ்த்தினர். மண்டையன் குழு எனஇவர்கள் மக்களால் குறிப்பிடப்பட்டனர். ஏழாலை – குப்பிளான் பகுதியில் புலிகள் உறுப்பினர் லோலோக்குமக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. இவர் இந்தியப்படையினர் மீது பல தாக்குதல்களை நடத்தி வந்தார். ஒருவீட்டுக்குப் புலிகள் உறுப்பினர் போலச்சென்றஈ.பி.ஆர்.எல்.எவ் வினர் ” லோலோ அண்ணை சாப்பாட்டுப்பார்சல் வாங்கிவரச் சொன்னார் ” என்று அந்தக் குடும்பத்தலைவியிடம் கூறினர். அந்த வீட்டில் சமையல்முழுமையாக முடியவில்லை. வேலிக்குள்ளால் அடுத்த வீட்டிப்பெண்மணியிடம் சொன்னார் அவர். அந்த வீட்டிலும் அதேநிலைதான். அங்கே காய்ச்சி முடிந்த கறியைக்கொண்டுவந்து இரு வீட்டுச் சமையலும் சேர்ந்தஉணவுப்பொதிகளைக் கட்டினர். ஒரு பையில் போட்டுஇவர்களிடம் கொடுத்ததும் இரு பெண்களையும்சுட்டுக்கொன்று விட்டு உணவுப் பொதிகளுடன் சென்றனர்ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர்.

காணாமல் போன முஸ்லீம் யுவதி !

மட்டக்களப்பில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. நகரின் காந்தி சிலைக்கு அண்மையில் சைக்கிள் வாங்கச்சென்றனர் காத்தான்குடியைச் சேர்ந்த ரிபாயா, அரசடியைச்சேர்ந்த சுகுணா ஆகியோர். அந்தக் கடை வாசலில்இவர்களைக் கண்ட (தற்போதைய கிழக்கு மாகாண சபைஉறுப்பினர்) இரா.துரைரத்தினம் ஒரு விசாரணைஇருப்பதாகவும் தங்கள் முகாமுக்கு தங்களுடன் காரில் வரவேண்டும் எனவும் சொன்னார். இவர்கள் “தாங்கள் நடந்துவருவதாகச் சொன்னார்கள்” இரா.துரைரத்தினமும் இன்னும்ஒருவரும் இவர்களுடன் சேர்ந்து நடந்து வாவிக்கரைவீதியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் முகாமுக்குச் சென்றனர் . (இந்த முகாம் தற்போது ஈ.பி.ஆர். எல்.எவ் வினரின்பணிமனையாகப் விளங்குகிறது.)அங்கு போனவுடனேயேசுதந்திர பறவைகளில் ஒன்றைக் கொண்டுவந்துள்ளதாகதொலை பேசி மூலம் யாருக்கோ தகவல் அனுப்பப்பட்டது. இவர்கள் இருவரும் சித்திரவதைக்கு உள்ளானார்கள். இவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர் கொண்டு சென்ற விடயம்பிரஜைகள் குழுப் பிரமுகர் வண. பிதா சந்திராபெர்னாண்டோ அவர்களுக்குப் தெரிவிக்கப்பட்டது.

அவர் இந்தியப் படையின் அதிகாரிகளுடன் வந்து சேர்ந்தபோது சுகுணா மயக்க நிலையில் காணப்பட்டார். ரிபாயாவைக் காணவில்லை. இன்று வரை அந்த மர்மம்துலங்கவில்லை. இவ் விடயத்தில் இந்தியப் படையினருடன்தொடர்பு கொண்ட வண . பிதா சந்திரா பெர்னாண்டோ06.06.1988 அன்று மட்டக்களப்பு மத்திய வீதியில்அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சுகுணா என்பவர் கண்ணன்/மயூரன் (சீனித்தம்பி ஜீவராஜ்) என்பவரின்சகோதரி.14.11.1990 அன்று புலிகளின் பயிற்சி முகாமில்ஏற்பட்ட விபத்தில் கண்ணன் உயிரிழந்தார். இக்காலகட்டத்தில் சுகுணாவும் இயக்கத்தில் இணையும்சூழ்நிலை ஏற்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் மீண்டும்மட்டக்களப்பில் அரச படைகளுடன் இணைந்து இயக்கத்தொடக்கி விட்டதால் வேறு வழி இருக்க வில்லை. இவருக்குவாஸந்தி பெயர் சூட்டிடப்பட்டது. பெண்கள் புனர்வாழ்வுநிறுவனப் பணிகளில் இவர் தீவிரமாக உழைத்தார்.

இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புகிளைச் செயலர் சௌந்தரராஜன் ஈரோஸ் சார்பாக 1989 பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாகஇலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் D.S. வணசிங்கா செயற்பட்டார்,. இவர் 31 /03 /1989 அன்று வெயிலி வீதி அரசடியில் உள்ள தனது வீட்டில் வைத்து ஈ. பி.ஆர்.எல் .எவ் வினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் வை வழிநடத்திய இரா. துரைரத்தினமும், ஆசிரியர் சௌந்தரராஜனும் இணைந்துஒரே கட்சியில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர். 13/05/1988 அன்று பாடசாலை அதிபரும், மக்கள் குழுத்தலைவருமான மாசிலாமணி கனகரத்தினம் ((ஆரையம்பதி) ஈ. பி. ஆர். எல்.எவ் வினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன் பின் மக்கள் குழுத் தலைவராக விளங்கியகணபதிப்பிள்ளை அதிபரும் (ஆரையம்பதி) ஈ. பி. ஆர். எல்.எவ் வினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொம்மாதுறையைச் சேர்ந்த தேவிசுதன் (கிராம அலுவலர்), சத்தியன் (மாணவன்) ஆகிய இருவரும் ஈ.பி.ஆர்.எல். எவ்உறுப்பினர் சந்துருவினால் கடத்தப்பட்டுக் காணாமல்போனார்கள் .

ஏற்கெனவே களுதாவளை யைச் சேர்ந்த முத்துலிங்கம்என்பவரும் ஈ.பி. ஆர் .எல் எவ் வினரால் படுகொலைசெய்யப்பட்டிருந்தார்.

தொடரும்

Related Posts